தமிழ் திரைப்பட ரசிகர்களின் மத்தியில் பரிச்சயமான நடிகர் ஓ.ஏ.கே.சுந்தர். இதுவரையிலும் சுமார் 100 படங்களுக்கும் மேலாக நடித்திருக்கும் ஓ.ஏ.கே.சுந்தர், வில்லன் கதாப்பாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களில் நடித்துப் புகழ் பெற்றிருக்கிறார்.

இவர் பழம்பெரும் நடிகரான ஓ.ஏ.கே.தேவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. வணிக ரீதியில் வெற்றி பெற்ற பல படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். அண்மையில் வந்த ‘யானை’, ‘விருமன்’ போன்று தொடர்ந்து வெற்றிப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
கலைஞரின் கைவண்ணத்தில் உருவான ‘ரோமாபுரிப் பாண்டியன்’ தொலைக்காட்சித் தொடரிலும், சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ‘மகாபாரதம்’ தொடரிலும் நடித்து தொலைக்காட்சி வழியேயும் ஒவ்வொரு இல்லத்தையும் தேடிச் சென்றடைந்திருக்கிறார்.
சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஓ.ஏ.கே. சுந்தர் நடிக்கவில்லை என்றாலும், ‘பொன்னியின் செல்வன்’ இவர் வாழ்க்கையோடு தொடர்ந்து கொண்டே வந்திருக்கிறது. இவரைப் பொறுத்தவரை, ‘பொன்னியின் செல்வன்’ கதையில் ஏற்கெனவே நடித்திருப்பவர்தான் ஓ.ஏ.கே.சுந்தர்.
இந்த நிலையில் நடிகர் சுந்தர் லோகநாயகி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆதிசங்கர் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் தற்போது நடிகர் சுந்தர் தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வருகிறார். இதோ அந்த புகைப்படம்.