- Advertisement -
- Advertisement -
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22.11) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றி. எதிராக வாக்களித்தவர்களுக்கு நன்றி. அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் இரண்டையும் நடத்துவேன். அதன் பிறகு மற்ற தேர்தல்களை நடத்துவேன்.”எனத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -