Monday, March 31, 2025

2024 வரவுசெலவு திட்டம் : 02ஆம் பாதீடு மீதான விவாதம் நிறைவேற்றம்!

- Advertisement -
- Advertisement -

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) பிற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் என்ற வகையில், அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை (22.11) முதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular