- Advertisement -
- Advertisement -
கொழும்பில் இருந்து ஹலவத்தை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் இருந்து கணவன், மனைவி இருவரும் கால் வைக்கும் பலகையில் இருந்த தவறி விழுந்ததில் விபத்துக்குள்ளாகியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (20.11) பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பலன்முல்ல சீதுவ பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -