- Advertisement -
- Advertisement -
யாழில் செயலி மூலம் முச்சக்கரவண்டி செலுத்தும் சாரதி ஒருவர் மீது தரிப்பிட சாரதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் யாழ் திருநெல்வேலி பழம் வீதி அருகில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து முறைப்பாடு வழங்க பொலிஸ் நிலையம் சென்றபோதும், பொலிஸாரும் அச்சுறுத்தும் வகையில் நடந்துக்கொண்டதாக பாதிக்கப்பட்ட சாரதி கவலை வெளியிட்டுள்ளார்.
யாழில் முச்சக்கரவண்டி சாரதிகள் அதிகவிலைக்கு சவாரி செல்கின்றனர். இந்நிலையில், பிக்மி, ஊபர் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி மக்கள் சவாரிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்காரணமாக தரிப்பிட சாரதிகள் மற்ற சாரதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -