Tuesday, April 1, 2025

யாழில் பிட்டு சாப்பிட்ட இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!

- Advertisement -
- Advertisement -

யாழ்ப்பாணத்தில் பிட்டு சாப்பிடும்போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (வயது 21) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் வீட்டில் பிட்டு சாப்பிட்ட போது  அது புரைக்கேறி உள்ளது. அதனை தொடர்ந்து தனக்கு நெஞ்சு அடைப்பதாக கூறியுள்ளார். இதனால் வீட்டார் சுடுநீர் குடிக்க கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த இளைஞன் சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  இருப்பினும் இளைஞர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற உடற்கூற்று பரிசோதனையில்,  சுவாச குழாய்க்குள் உணவு மாதிரிகள் காணப்பட்டுள்ளதாகவும், இதனால் சுவாச குழாய்க்குள் உணவு பதார்த்தம் அடைத்து கொண்டமையாலையே மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular