நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் என்று கூறி தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தும் மர்ம நபர்கள், வர்த்தகர்களிடம் இருந்து பணம் பெறும் மோசடி இடம்பெற்றுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
கட்டுப்பாட்டு விலைக்கு மேல் சீனியை விற்பனை செய்தமை மற்றும் இருப்புக்களை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் சட்ட நடவடிக்கை எடுத்த கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறு தொலைபேசி அழைப்புகள் வந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் சீனி விற்பனை செய்யும் 300 கடைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த கடைகளின் உரிமையாளர்கள் மீது எதிர்காலத்தில் வழக்கு தொடர உள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.