Saturday, March 8, 2025

தலவாக்கலையில் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

- Advertisement -
- Advertisement -

தலவாக்கலைப் பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரு இளைஞர்கள் மீது மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வந்த சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (13.11) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்த இளைஞர்கள்,  தலவாக்கலை ஹெலிரூட் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் உள்ள  லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்த.

இதில் 22 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவருக்கும், தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்களுக்கும் இடையில் முன்விரோதம் இருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தலவாக்கலை பொலிஸார் 04 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் 21, 23 மற்றும் 24 வயதுடையவர்கள் எனவும், வடகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் லிந்துலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணைகளும் பிரேத பரிசோதனைகளும் இடம்பெறவுள்ளளதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular