விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதால் இல்லத்தரசிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இந்த சீரியல் தற்பொழுது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இந்த சீரியலில் கண்ணன் பேங்கில் அதிகமாக டெபிட் கார்டை வைத்து கடன் வாங்கி இருக்க, கடன் கேட்க வந்த ஆபீசர்கள் கண்ணனை அடித்தனர். இதை பார்த்த கதிர் அந்த பேங்க் ஆபீஸர்களை திருப்பி அடித்தார்.இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர் இந்த சமயத்தில் மூர்த்தி, ஜீவா இருவரும் சேர்ந்து கண்ணனை மீட்டு தற்பொழுது வெளியே கொண்டு வந்துள்ளனர். இப்படி பரபரப்பாக தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரமான மீனா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ஹேமா ராஜ். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவருக்கென்று இந்த சீரியல் பார்ப்பவர்களும் ஏராளம் . தற்போது இந்த சீரியலில் மீனாவின் அம்மாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ஸ்ரீவித்யா.
இவர் தற்பொழுது தனது மகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்’ உங்களுக்கு எவ்வளவு அழகான மகள் இருக்காங்களா?’ என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.