- Advertisement -
- Advertisement -
பஸ்கந்தக், கவரங்கேன, வஹிந்தன்ன, பலாங்கொட பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (12.11) இரவு பெய்த மழையுடன் கூடிய காலநிலையினால் மேற்படி அனர்த்தம் நேர்ந்துள்ளது.
பஸ்கந்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் அங்கு 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் வீடு ஒன்றில் இருந்த தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் தற்போது காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இவர்கள் மண் மேட்டின் கீழ் புதைக்கப்பட்டார்களா அல்லது மண்சரிவு காரணமாக வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்களா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -