வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய “பிரதேச பண்பாட்டு பெருவிழா- 2023“ அமரர் ஞானவாசகர் (அழகக்கோன்) அரங்கில் நேற்று (2023.11.09) இடம் பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் .பி.ஏ.சரத்சந்ர தலைமையில் இடம்பெற்ற குறித்த விழாவில் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

அதன் போது பாடசாலை மாணவர்களால் கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டதோடு மூத்த கலைஞர்கள் சிலருக்கும் பொன்னாடை போர்த்தி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் கலைநிகழ்வுகளை நிகழ்த்திய மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.