Tuesday, April 1, 2025

2023 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை அணி நாடு திரும்பியது!

- Advertisement -
- Advertisement -

2023 உலகக்கிண்ண ஒருநாள் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று (10.11) அதிகாலை 05.05 மணியளவில் இலங்கை வந்தடைந்துள்ளது.  இந்தியாவின் பெங்களூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல். – 174 விமானத்தில் அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

அவர்களை வரவேற்க இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் பலர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திற்கு சென்றுள்ளனர்.

அவர்கள் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இருந்து புறப்படுவதற்கு பொது பேருந்து ஒன்று தயார் செய்யப்பட்டிருந்த போதிலும், பல வீரர்கள் தங்களது சொந்த கார்களில் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டனர்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு பின்னணியில் ஒரு குறிப்பிட்ட குழுவினர் இருப்பதுவும், அவர்களின் இந்த சோகமான தோல்விக்கு காரணம் என இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவர் பிரமோத்யாய விக்கிரமசிங்க கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் தெரிவித்தார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular