- Advertisement -
- Advertisement -
இலங்கை பிரித்தானியர்களின் ஆட்சிக்கு கீழ் இருந்த சந்தர்ப்பத்தில் நுவரெலியாவில் கட்டப்பட்ட தபால் நிலையத்தினை விற்பனை செய்ய அரசு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலிய தபால் நிலையத்தைச் சுற்றி கருப்பு கொடிகள் கட்டப்பட்டு, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதப்பட்ட பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில் இன்று (07.11) தபால் நிலையத்திற்கு முன்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் பதாதைகளுடன் தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதற்கு எதிராக செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
- Advertisement -