Tuesday, April 1, 2025

GCE O/L பரீட்சை முடிவுகள் குறித்து வெளியான விசேட அறிவிப்பு!

- Advertisement -
- Advertisement -

கல்விப் பொதுத்தராதர  சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (06.11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சுசில் பிரேமஜயந்த இவ்வாறு கூறியுள்ளார். ‘

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “2024 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நடந்து வருவதாகவும், சில பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி 60 சதவீதம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த வேலைத் திட்டத்திடத்திற்காக ஒரு நிதியத்தை ஆரம்பிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சை ஆகியவற்றுக்குப் பிறகு மாணவர்களுக்கு ஆங்கில மொழி, திறன் விருத்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை பயிற்சிகளை வழங்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் கூறினார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular