Wednesday, April 2, 2025

இலுப்பைக்குளம் பகுதியில் தோன்றிய புத்தர் சிலை!

- Advertisement -
- Advertisement -

திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் பொரலுகந்த ரஜமாகா விகாரைப்பகுதியில் இன்று (06.11) புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பகுதியில் ஆரம்பத்தில் பௌத்த விகாரை கட்டுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு  நிலவியது.

குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு ஆளுநரிடம் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் பொதுமக்கள் முறையிட்டதையடுத்து கட்டுமானப் பணிகளுக்கு எதிராக ஆளுநர் தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

எனினும் ஆளுநரின் தடையுத்தரவையும் மீறி கட்டுமானப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

en EN si SI ta TA