காஸா பகுதியில் தங்கியிருந்து எகிப்து சென்ற 11 இலங்கையர்களும் பத்திரமாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.
கட்டாரின் தோஹாவில் இருந்து விமானம் மூலம் இன்று (05.11) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காஸாவில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் கடந்த 3ஆம் திகதி எகிப்துக்கு வந்ததாக பலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகத்தின் தலைரவ் பென்னட் குரே தெரிவித்துள்ளார்.
ரஃபா எல்லை வழியாக எகிப்திற்கு வருகை தந்த இலங்கையர்கள் எகிப்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில், அங்கிருந்து வெளியேறி இலங்கையை வந்தடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
காசா பகுதியில் இருந்து 17 இலங்கையர்கள் வெளியேறிய நிலையில், அவர்களில் 11 பேர் மாத்திரமே நாட்டிற்கு வந்துள்ளனர். மீதமுள்ளவர்களால் பாதுகாப்பின்மை காரணமாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.