Thursday, April 3, 2025

அரச ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாக 10,000 ரூபாய் வழங்கப்படும் எனத் தகவல்!

- Advertisement -
- Advertisement -

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே மேற்படி அறிவிப்பு  வெளியாகியுள்ளது. இது குறித்து அமைச்சரவைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சுமார் 15 லட்சம் அரச ஊழியர்களுக்கு இந்த சம்பள அதிகரிப்பு கிடைக்குமென செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் அரசாங்க ஊழியர்கள் 20 ஆயிரம் ரூபாவை சம்பள அதிகரிப்பாக கோரியிருந்தனர். இதனை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular

en EN si SI ta TA