Tuesday, April 1, 2025

வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட வைத்தியர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது!

- Advertisement -
- Advertisement -

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சற்று முன்னர் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் சாதகமான பதில் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்  ஹரித அலுத்கே தெரிவித்தார்.

வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று (03.11) வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை ஓரளவு தணிக்கும் வகையில் வைத்தியர்களை அரசாங்கம் தக்கவைக்க தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மாகாண மட்டத்தில் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular