இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் மாத்திரம் 485 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய STD எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் இந்த ஆண்டு 4,100 எச்.ஐ.வி நோய்த் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் இறுதி வரை, 485 புதிய எச்.ஐ.வி நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவற்றில் 80% ஆண்கள் மத்தியில் பதிவாகியுள்ளது. எச்.ஐ.வி தொற்று 15-49 வயதிற்கு இடையில் அதிகமாக அதிகரித்து வருகிறது.
டிசெம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தினால் பொதுமக்களை அறிவூட்டும் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.