- Advertisement -
- Advertisement -
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் உடனடியாக 1977 க்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கோரியுள்ளது.
அரிசியை மறைத்து வைத்திருக்கும் வியாபாரிகளையும் இதே தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள போதிலும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் அதிகாரசபை சோதனைகளை ஆரம்பித்துள்ளது.
அரிசிக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டுப்பாட்டு விலையின்படி சிவப்பு மற்றும் வெள்ளை நாடு கிலோ ஒன்றுக்கு 220 ரூபாவும், கீரி சம்பா 260 ரூபாவும், சம்பா 230 ரூபாவும், சிவப்பு மற்றும் வெள்ளை பச்சை அரிசி 210 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும்.
- Advertisement -