Friday, March 28, 2025

ஆந்திர பிரதேசத்தில் ரயில் விபத்து : 09 பேர் உயிரிழப்பு!

- Advertisement -
- Advertisement -

இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் இன்று (30.10) காலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் 9 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி இயக்கப்படும் பயணிகள் ரயில் விசாகப்பட்டினத்திலிருந்து பலாசா நோக்கி இயக்கப்படும் சிறப்பு பயணிகள் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சிக்னல்களை காணாத காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு, ஒடிசாவில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில், 280-க்கும் மேற்பட்ட பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular