- Advertisement -
- Advertisement -
யாழில் முச்சக்கர வண்டியொன்று இன்று (29.10) விபத்திற்குள்ளானதில் குழந்தை உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
வேகமாக சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கடலை அண்மித்த பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி யாழ்ப்பாணம், பண்ணை பகுதியில் வைத்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட 5 பேர் பயணித்த நிலையில், அவர்களில் 4 பேர் விபத்தில் காயமடைந்ததாகவும் அவ்வாறு காயமடைந்தவர்களில் 3 பெண்கள் ஒரு குழந்தை அடங்குவதாகவும் கூறப்படுகிறது.
யாழ்ப்பாணம் பொலிஸார் இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -