Monday, March 10, 2025

சம்பள அதிகரிப்பு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் இறங்கும் அரச சேவை சங்கங்கள்!

- Advertisement -
- Advertisement -

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இந்த போராட்டமானது நாளை (30.10) நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தொழிற்சங்க சங்கத்தின் இணைப்பாளர்  சந்தன சூரியஆராச்சி குறிப்பிட்டார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி, அலுவலக சேவைகள் மற்றும் மாகாண அரசாங்க சேவைகள் என பல சேவைகள் இணைந்து இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அடுத்த வாரத்திற்குள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular