Monday, March 10, 2025

முல்லைத்தீவில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்

- Advertisement -
- Advertisement -

முல்லைத்தீவில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 14 வயதுடைய சிறுமியே இவ்வாறு வன்புணர்விற்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில், முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதற்கமைய மருத்துவ அறிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுமியை இரு வேறு சந்தர்ப்பங்களில் இருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முதல் சந்தேக நபரை கைது செய்து 27.10.2023 அன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சிறுமி தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular