தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் அவரின் மிகப்பெரிய கனவுப் படமாக உருவாகியுள்ளது தான் பொன்னியின் செல்வன்.இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியான நிலையில் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது.

முதல் பாகத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அனைவராலும் ரசிக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் படம் வசூல் சாதனை படைத்தது.
கல்கியின் வரலாற்று காவியமாக எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி நடித்துள்ளார்.
மேலும் நடிகர் கார்த்தி வந்திய தேவனாகவும், விக்ரம் ஆதித்ய கரிகாலன் ஆகவும், திரிஷா குந்தவை ஆகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் ஊமை ராணி என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.இதில் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சமீபத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பொன்னியின் செல்வன் 2 படம் ரிலீஸான 7 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 128.50 கோடி வசூல் செய்தது.இந்த வாரம் இறுதிக்குள் உலக அளவில் ரூ. 250 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் அன்சீன் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வரலாகி வருகிறது.