- Advertisement -
- Advertisement -
நல்லதண்ணி, லக்ஷபான, வளமலை தோட்டத்தில் வசிக்கும் மூன்று பாடசாலை மாணவிகள் கடந்த (26.10) முதல் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட்டுயாவில் அமைந்துள்ள தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவிகள் மூவரும், பாடசாலை செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், பாடசாலைக்கு செல்லாமல் நல்லதண்ணி நகரில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டு விட்டு சென்றுள்ளனர்.
தண்ணீர் குழாயை உடைத்ததாக பெற்றோர் திட்டியதால் மூன்று மாணவிகளும் வீடுகளை விட்டு ஓடி ஒளிந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மாணவர்களை கண்டுபிடிக்க நல்லதண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
- Advertisement -