1500 குடும்ப சுகாதார பணியாளர்களை உடனடியாக வேலைக்கு அமர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நேர்முகத்தேர்வில் சித்தியடைந்து 03 வருடங்களாக வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்ப சுகாதார பணியாளர்கள் குழுவொன்றை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் சில தினங்களில் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “வேறு பல நிறுவனங்களும் ஆட்சேர்ப்பு கேட்கின்றன. ஆனால் குடும்ப நலப் பணியாளர்களின் தேவையை அமைச்சகம் மிகத் தெளிவாகப் பார்க்கிறது. இது ஒரு அத்தியாவசிய சேவை. இதுபோன்ற சூழ்நிலையில், அரசு எவ்வாறு ஆட்சேர்ப்பு செய்ய முடியும் என்பது குறித்து பாரிய விசாரணை நடத்தப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.