Monday, March 10, 2025

வவுனியாவில் ரயிலில் மோதுண்டு இரு காட்டு யானைகள் உயிரிழப்பு!

- Advertisement -
- Advertisement -

வவுனியா, செட்டிகுளம் அடியபுளியங்குளம் பகுதியில், தலைமன்னாரத்திற்குச் சென்று கொண்டிருந்த இரவு அஞ்சல் ரயிலில் மோதுண்டு இரு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து தலைமன்னார்ம் நோக்கிச் சென்ற இரவு அஞ்சல் புகையிரதம் அடியபுளியங்குளம் பகுதியில் ரயில் பாதையை கடக்க முற்பட்ட காட்டு யானைகள் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதோடு மேலும் பல காட்டு யானைகளும் காயமடைந்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தனர்.

எவ்வாறாயினும், யானை விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரத பாதையை கடப்பதால், வேகக்கட்டுப்பாட்டை மீறி புகையிரத சாரதி அதிவேகமாக ரயிலை செலுத்தியமையே விபத்துக்கு காரணம் என வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் 15 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட இரண்டு ஆண் மற்றும் பெண் காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், காட்டு யானைகளின் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ள வடமாகாண வனவிலங்கு கால்நடை வைத்தியர்  கிரிதரன் உள்ளிட்ட வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular