ரஷ்யா மிகப்பெரிய அணு ஆயுத சோதனை நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்கு எப்படி பெரிய அளவிலான அணுகுண்டு தாக்குதலை நடத்தலாம் என்பதை சோதனை செய்ததாக கிரெம்ளின் கூறுகிறது.
எதிரிகளின் அணுகுண்டு தாக்குதலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த பூர்வாங்க தயாரிப்புதான் இதன் முக்கிய நோக்கம் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கூறினார்.
உக்ரைன் – ரஷ்ய போர் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த போரில் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. நிபுணர்களும் அவ்வவ்போது தாக்குதல் குறித்த எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், ரஷ்யா மேற்கொண்டுள்ள இந்த அணுவாயுத பரிசோதனையானது போரில் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.