Friday, April 18, 2025

மலேசியாவில் இலங்கை தம்பதியினர் சடலமாக மீட்பு!

- Advertisement -
- Advertisement -

மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

மலேசியாவில் மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றிய தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள இவர்களது வீட்டிற்கு அருகில் அவர்கள் ஓட்டிச் சென்ற கார் மற்றுமொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

விபத்தின் போது அவர்களின் மகளும் காரில் இருந்த நிலையில் மகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண்ணுக்கு 33 வயது எனவும் அவரது கணவருக்கு 35 வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular