தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மிர்ச்சி சிவா. இவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு ரேடியோ மிர்ச்சியில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றினார். இவர் 2001ல் ஷாம் நடிப்பில் வெளியான 12B என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து விசில் திரைப்படத்தில் நடித்தார். எதிர்பார்த்த அளவிற்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் தனது ரேடியோ ஜாக்கி வேலையையை தொடர்ந்தார் நடிகர் சிவா. அதன் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சென்னை 600028’ என்ற திரைப்படத்தின் மூலம் சிவாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதை தொடர்ந்து சரோஜா திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. பின்னர் நடிகர் சிவா ‘தமிழ் படம்’ என்ற திரைப்படத்திலும் நடித்து அசத்தியிருந்தார். நடிகர் விமலுடன் இணைந்து சுந்தர் சி இயக்கத்தில் ‘கலகலப்பு’ திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.
இத்திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தில்லுமுல்லு 2, சொன்னா புரியாது, யா யா மற்றும் வணக்கம் சென்னை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் நடிகர் மிர்ச்சி சிவா. கிட்டத்தட்ட 20 படங்களுக்கும் மேல் நடித்து தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் ஹீரோவாக உருவெடுத்து வருகிறார் நடிகர் மிர்ச்சி சிவா. நடிகர் மிர்ச்சி சிவா 2012ல் விளையாட்டு வீராங்கனை பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. சமீபத்தில் நடிகர் மிர்ச்சி சிவாவும் அவரது மனைவியும் ஜெயம் ரவி ஆர்த்தி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்பொழுது எடுக்கப்பட்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்….