Saturday, March 15, 2025

பங்களாதேஷில் பயணிகள் மீது மோதிய சரக்கு ரயில் : 10 பேர் பலி!

- Advertisement -
- Advertisement -

பங்களாதேஷின் கிஷோர்கஞ்சில் சரக்கு ரயில் ஒன்று பயணிகள் ரயில் மீது மோதியதில் குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளனர்.

தலைநகர் டாக்காவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைரப் என்ற இடத்தில் பயணிகள் ரயில் சரக்கு ரயில் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது, ரயிலுக்கு அடியில் பலர் சிக்கியுள்ளதாக நேரில் பார்த்தவர்களை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்தவர்களில் பலர் சேதமடைந்த பெட்டிகளுக்கு அடியில் கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular