Monday, March 10, 2025

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!

- Advertisement -
- Advertisement -

தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கும் சாத்தியங்கள் தற்போதைக்கு கிடையாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

எவ்வாறெனினும், தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளும் அண்மையில் தளர்த்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் போதியளவு வாகனங்கள் காணப்படுவதாக துறைசார் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எரிபொருள் மற்றும் டொலர் கையிருப்பு போன்ற காரணிகள் தொடர்பில் மதிப்பீடுகளை செய்து அதன் அடிப்படையில் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும்.

எவ்வாறெனினும் தற்போதைக்கு தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கும் சாத்தியங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular