- Advertisement -
- Advertisement -
மிகவும் அரிதான இரண்டு கஜமுத்துக்கள் உட்பட 06 கஜமுத்துக்களை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் வளான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவிசாவளை, புவக்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வளான மத்திய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் பொறியியலாளர் ஒருவரைப் பயன்படுத்தி இது குறித்துச் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இந்த கஜமுத்துக்கள் அனுராதபுரம் நோட்சியாகம பிரதேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும், 60 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்றதாகவும்தெரிவித்துள்ளார்.
- Advertisement -