தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவர் நடிகர் வின்சென்ட். இவர் 1965 ஆம் ஆண்டு அக்டோபர் 7 தேதி பிறந்தார்.இவர் சென்னை சேர்ந்தவர். இவர் தந்தை எஸ் ஏ அசோகன் இவரும் ஒரு நடிகர். இவர் இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான’எய்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இவர் தமிழில் 6’2 ,தொட்டி ஜெயா, சாணக்யா, நீ வேணுண்டா செல்லம், தகப்பன் சாமி, படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு வெளியான ‘போக்கிரி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.
அதை தொடர்ந்து இவர் துரை, யோகி ,குட்டி ,வல்லக்கோட்டை, வேலாயுதம், லட்சுமி ,தலைவன் கில்லாடி, மாரி 2 ,வடசென்னை அரண்மனை 3 ,கேப்டன் போன்ற தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார்.இவர் சன் டிவியில் ஒளிபரப்பான நம்பிக்காய் ,
மாயா போன்ற தொலைக்காட்சியில் நாடகங்களில் இவர் நடித்துள்ளார்.அதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு ‘குருவதி கலம்’ என்ற வெப் சீரியஸில் நடித்துள்ளார். இந்த வெப் சீரியஸ் ஆனது MX பிளேயர் இல் வெளியானது.2020 ஆம் ஆண்டு வெளியான ‘சிங்க பெண்ணே’ என்ற வெப் சீரியஸில் நடித்துள்ளார்.
இந்த வெப் சீரியஸ் ஆனது ஜி5 ஒளிபரப்பானது.நடிகர் வின்சென்ட் டினா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு பேஷன் டிசைனர். இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.இவர் தன் அம்மாவுடன் சேர்ந்து பேஷன் டிசைனிங் செய்து வருகிறார். தற்போது இவர்களின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .