- Advertisement -
- Advertisement -
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா மீதான அச்சுறுத்தலின் மூலம் நீதித்துறை சுயாதீனமாக செயற்ப்பட முடியாத நிலமைக்கு எதிர்ப்புதெரிவித்தும் வடக்கு கிழக்கில் முன்னெடுக்குப்படும் பொத்தமயமாக்கல், செயற்பாடுகளிற்கு கண்டனம் தெரிவித்தும் வடகிழக்கில் கடந்த 20ம்திகதி ஹார்த்தால் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த ஹார்த்தாலை எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் அரசியல்வாதிகளுக்கு ஹார்த்தால் மக்கள் பட்டினியால் வாடுகின்றார்கள் எனும் வசனத்துடன் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சுவரோட்டியின் கீழ்ப்பகுதியில் சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் என உரிமம் கோரப்பட்டுள்ளதுடன் நகர மத்தி , நூலக வீதி , வைரவப்புளியங்குள வீதி , குருமன்காடு , கந்தசாமி கோவில் வீதி போன்ற வீதிகளில் ஒட்டப்பட்டிருந்தன.
- Advertisement -