தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் பிரம்மானந்தம். இவர் 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி பிறந்தார்.இவர் தந்தை நாகலிங்காச்சாரி மற்றும்தாய் லட்சுமி நர்சம்மா.இவர் தனது முதுகலை பட்டத்தை முடித்தார்.பிரம்மானந்தம் ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அத்திலியில் தெலுங்கு lecturer பணியாற்றினார் .

அதே நேரத்தில், அவர் நாடகத்திலும் மிமிக்ரி கலைஞராகவும் பணியாற்றினார்.1985 ஆம் ஆண்டு டிடி தெலுங்கின் பகபகாலு மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.இதைத் தொடர்ந்து இயக்குனர் ஜந்தியாலா இயக்கிய ‘அஹா நா பெல்லண்டா’ படத்தில் நடிதார்.இப்படத்தின் இவரது வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்து.
இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் 2009 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் நடிகர் பிரம்மானந்தத்திற்கு நான்காவது மிகப் பெரிய உயரிய விருதானநான்காவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்மஸ்ரீ பட்டத்தை வழங்கியது.
இவர் வாழும் நடிகருக்கு அதிக திரையில் கிரெடிட் செய்தவர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் .2002 ஆம் ஆண்டு வெளியான ‘மன்மதுடு’ என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை பெற்றார்.இதை தொடர்ந்து இவர் 6 நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார்.இவர் நடித்த மன்மதுடு , டீ , கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் , அதர்ஸ், தூக்குடு போன்ற படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான சினிமா விருது வென்றார்.
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான எஸ் ஐ ஐ எம் ஏ விருது மூன்று முறை பெற்றார். இவர் நடிகர் , நகைச்சுவை நடிகர் , இயக்குனர் ,ஓவியர் போன்ற பன்முகத் திறமைகளை கொண்டவர்.நடிகர் பிரம்மானந்தம் லட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.