Tuesday, March 18, 2025

இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய மின் கட்டண திருத்தம்!

- Advertisement -
- Advertisement -

இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (20.10) மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்க தீர்மானித்திருந்தது.

அதன்படி இன்று முதல் மின்கட்டண திருத்தம் வருமாறு.

0-30 யூனிட்களில் இருந்து நிலையான கட்டணம்  150 முதல்  180 ரூபாவாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு மின் அலகு விலை 12 ரூபாவால் உயர்ந்துள்ளது.

31 முதல் 60 யூனிட் வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 300 ரூபாயில்  இருந்து  360 ரூபாவாக  அதிகரித்துள்ளது.  அந்த வகையில் ஒரு மின் அலகு விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

61 முதல் 90 யூனிட்களுக்கு இடையே  400 ரூபாய் முதல் 480 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் , 91 முதல் 120 வரையான அலகுகளுக்கு   1,000 முதல் 1,180 ரூபாய் முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  121 முதல் 180 யூனிட் வரை 1,500  முதல் 1,770 ரூபாவாகவும், 180 யூனிட்டுகளுக்கு மேல் இருந்தால் 2000 முதல் 2,360 ரூபாவாகவும் நிலையான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular