- Advertisement -
- Advertisement -
இன்று (20.10) முதல் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இதன்படி, மின்சாரத்தைப் பயன்படுத்தும் அலகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப திருத்தப்பட்ட கட்டணங்கள் எவ்வாறு அதிகரிக்கப்படும் என்பது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (20.10) அறிக்கையொன்றை வெளியிடவுள்ளது.
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான எதிர் நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் கலந்தாய்வின் பின்னரான உண்மைகளை மீளாய்வு செய்ததன் பிரகாரம் சுமார் 18 வீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை இன்று வெளியிடப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -