- Advertisement -
- Advertisement -
கிருலப்பன மாவத்தையில் உள்ள தனியார் இறப்பர் தொழிற்சாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையின் தலைமை அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பம் இடம்பெற்ற பகுதியில் 03 வெற்று வெடிமருந்து பெட்டிகளை கண்டுப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் கிருலப்பனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -