நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பலப் பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொகவந்தலாவை தெரேசியா தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பு தொகுதியொன்றின் பின்பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 5 குடியிருப்புக்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் நிமல் பண்டார தெரிவித்தார்.
இதன் காரணமாக அக்குடியிருப்புக்களில் வசித்த 5 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் தற்காலிகமாக அத்தோட்டத்தின் மற்றுமொரு பாதுகாப்பான கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார குறிப்பிட்டார்.
குடியிருப்புக்களின் மீது வீழ்ந்துள்ள மண்குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொகவந்தலாவ தெரேசியா தோட்டத்தின் தோட்ட அதிகாரி இமேஷ் போகவத்த தெரிவித்தார்.