Monday, March 17, 2025

யாழ் போதனா வைத்தியசாலைக்கு உறவினரை பார்க்க வந்த நபரை தாக்கிய பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள்!

- Advertisement -
- Advertisement -

யாழ்.போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் நபர் ஒருவருடன் முரண்பட்டு அவரை மிக மோசமாக  தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இரண்டு பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இணைந்து நபரை கீழே தள்ளி விழுத்தி ஈவிரக்கமின்றி தாக்குவது குறித்த காணொலியில் பதிவாகியுள்ளது.

போதனா வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கபட்டிருக்கும் தனது உறவுக்கு சாப்பாடு கொண்டு சென்ற போதே குறித்த நபர் இவ்வாறு தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படுகின்றது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை மதுபோதையில் வந்த நபர் அநாகரிகமாக நடந்து கொண்டதுடன்,  பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தாக்குதலை மேற்கொண்டு வைத்தியசாலைக்குள் செல்ல முற்பட்ட போதே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் அவரை தாக்கியதாக வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில்  தாக்குதலுக்கு இலக்கான நபரையும்,  தாக்குதல் மேற்கொண்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவரையும் கைது செய்த யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular