Monday, March 17, 2025

சட்டவிரோதமாக கட்டார் செல்ல முயற்சித்த இளம் யுவதி கைது

- Advertisement -
- Advertisement -

கட்டாருக்கு சட்டவிரோதமான முறையில் வீட்டு வேலைக்காக செல்ல முயற்சித்த இளம் யுவதியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்படாத முகவர் ஒன்றினால் கட்டாருக்கு சட்டவிரோதமான முறையில் வீட்டு வேலைக்குச் செல்வதற்காக குறித்த யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

21 வயதுக்கு மேற்பட்ட யுவதிகள் வீட்டு வேலைக்காக கட்டாருக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும், கைது செய்யப்பட்ட இளம் யுவதி வீட்டு சேவைக்கு விண்ணப்பிப்பதற்கான சரியான வயதை பூர்த்தி செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட யுவதி மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular