Monday, March 17, 2025

இலங்கையில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி!

- Advertisement -
- Advertisement -

இணையம்  (Online) மூலம் வேலை வாய்ப்பு தருவதாக தெரிவித்து சுமார் 1 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மோசடி விசாரணை பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்  கரந்தெனிய, தெனகொட பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 94 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட நபரின் 3 வங்கிக் கணக்குகளில் 72 இலட்சம் ரூபா பணம் இருப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular