Monday, March 17, 2025

வவுனியா வேப்பங்குளத்தில் பாதசாரிகள் கடவையை கடக்க முயன்ற மாணவனை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி – மாணவன் படுகாயம்

- Advertisement -
- Advertisement -

வவுனியா வேப்பங்குளம் 8ம் ஒழுங்கைக்கு அண்மித்த பகுதியில் இன்று (13.10) மதியம் பாதசாரிகள் கடவையினை கடக்க முயன்ற மாணவனை முச்சக்கரவண்டி மோதியதில் மாணவன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

குறித்த பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாகவுள்ள பாதாசாரிகள் கடவையினை பாடசாலை மாணவணோருவர் கடக்க முயன்ற சமயத்தில் நெளுக்கும் பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி பாதையினை கடக்க முயன்ற மாணவனை மோதித்தள்ளியது

இவ் விபத்தில் பாடசாலை மாணவன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான ஆரம்ப கட்ட விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular