இலங்கை அணியின் இளம் வீரர் மதீஷா பத்திரனாவுக்கு ஜாம்பவான் மலிங்கா ஆதரவு தெரிவித்துள்ளார்.உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியில் விளையாடி வரும் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா. ஜூனியர் மலிங்கா என்று அழைக்கப்படும் மலிங்கா ஐ.பி.எல் தொடரில் மிரட்டலான பந்துவீச்சை காட்டினார். ஆனால் உலகக்கோப்பை தொடரில் இதுவரை விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் பத்திரனா சொதப்பியுள்ளார்.
மொத்தம் 19 ஓவர்கள் வீசியுள்ள அவர் 185 ஓட்டங்களை விட்டுக்கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக உதிரி ரன்களை (Extra) வாரி வழங்கியுள்ளார். இதன்மூலம் அதிக உதிரி ரன்கள் (71) கொடுத்த மோசமான பந்துவீச்சாளராக மாறியுள்ளார். இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்கா தனது ஆதரவினை பத்திரனாவுக்கு தெரிவித்துள்ளார்.அவர் தனது பதிவில், ‘நான் உன்னுடன் இருக்கிறேன் மதீஷா. மேலும் நான் உன்னை நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.