வவுனியாவில் புலமைப் பரிசில் பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளில் சுகாதாரப் பிரிவினர் இன்று (12.10) திடீர் சோதனையை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு பூரவாகவும் 2023 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பெருகும் அபாயம் உள்ளது. இதனால் பரீட்சைக்கு சமூகளமிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுகிறது.
இந்நிலையில், வவுனியா மாவட்டத்தில் பரீட்சை நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளில் டெங்கு நோய் தொற்று மற்றும் நுளம்புகளின் பெருக்கம் உள்ளதா என வவுனியா பிராந்திய சுகாதாரப் பிரிவினரால் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மாரிகாலம் ஆரம்பித்துள்ளமையால், நுளம்பு பெருக்கம் ஏற்படக் கூடிய இடங்களை அழிக்குமாறும், நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் உடனடியாக துப்பரவுப் பணிகளை மேற்கொள்ளுமாறும் இதன்போது சுகாதாரப் பிரிவினரால் பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.