Monday, March 17, 2025

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை : உதவி வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு தடை!

- Advertisement -
- Advertisement -

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான உதவி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நேற்று (11.10) நள்ளிரவு நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை பரீட்சைக்காக  2,888 நிலையங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular