- Advertisement -
தெற்கு அதிவேக வீதியில் மண்மேடு சரிந்ததில் 7 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் 6 விசேட அதிரடி படை உத்தியோகத்தர்களும், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் அடங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு அதிவேக வீதியில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த உத்தியோகத்தர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, பின்னதுவ மற்றும் இமதுவ பகுதிக்கு இடைப்பட்ட 102 ஆவது கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகில், வீதியின் இருபுறமும் உள்ள மலைகளே இவ்வாறு சரிந்து வீழ்ந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.
மேலும், அந்த மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
- Advertisement -