- Advertisement -
- Advertisement -
மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர, அக்குரஸ்ஸ மற்றும் ஹக்மன பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு அபாயம் குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 03 ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மண்சரிவு முன்னெச்சரிக்கையானது 24 மணித்தியாலங்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் மேலும், 07 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி காலி, களுத்துறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் பதுளை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -